செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

கல்வியியல் கல்லூரி மாணவர்களினால் இராசவீதியில் சிரமதானம்

யாழ்ப்பாணம் – கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியின் மூன்றாம் வருட உள்ளகப்பயிற்சி மாணவர்களும் வலிக்கிழக்கு பிரதேச சபையினரும் இணைந்து முன்னெடுத்த சிரமதானம் நேற்று (25) இடம்பெற்றது.

குறித்த சிரமதானத்தின் போது கல்வியியற் கல்லூரியின் வாசலில் இருந்து கோப்பாய் கிருஷ்ணன் கோவில் வரையிலான வீதியின் இரு மருங்கிலும் உள்ள பற்றைகள், புதர்கள் வெட்டி அகற்றப்பட்டது.

கோப்பாய் இராசவீதியின் இரு மருங்கிலும் உள்ள பற்றைகள் வீதியை நோக்கி வளர்ந்து இருப்பதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவு வீசப்பட்டுள்ளதால் சூழல் மாசுபாடு ஏற்படுவதாலும், புதர்கள் அதிகளவு வளர்ந்திருப்பதனால் பாதுகாப்பற்ற சூழலும் அப்பகுதியில் காணப்படுவதனால் குறித்த சிரமாதனம் முன்னெடுப்பட்டது.

Related posts

சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்- வைரமுத்து

Bavan

உணவுப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை!

reka sivalingam

எஸ்.எம்.எஸ் தொழில்நுட்பம் ஊடாக சாரதி அனுமதிப் பத்திரம்

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.