செய்திகள் பிரதான செய்தி

கல்வி அமைச்சின் ஈ-தக்சலாவ தளத்திற்கு நுழைய வசதி

தற்போது நடைமுறையில் உள்ள விடுமுறை காலத்தில் வீட்டில் இருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி ஈ-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கல்வி அமைச்சினால் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் மேற்கொள்ளப்பட்ட வேண்டுதலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைவாக www.e-thaksalawa.moe.gov.lk/ (IP 43.224.124.108) ஊடாக ஈ-தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிப்பதற்கு மார்ச் 23 முதல் வாய்ப்புகள் கிட்டும். தக்சலாவில் பிரவேசிக்கும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாட செயற்பாடுகள், வினாத்தாள்கள் மற்றும் பாடநூல் தொடர்பான பயிற்சிகள் உட்பட கற்றல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதிகமான பாடதிட்டங்களுடன் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

Related posts

சிறுப்பிட்டியில் முதியோர்களுக்கு உதவிகள்

G. Pragas

ஊரடங்கு சட்டத் தளர்வு நீடிப்பு!

G. Pragas

கொரோனாவை தடுக்க அரசின் நடவடிக்கை குறித்து – ரணில் அறிக்கை

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.