கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

களைகளை அகற்றும் மாதிரி உழவு இயந்திரம் கண்டு பிடிப்பு

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் சோளன் பயிர் செய்கையின் உற்பத்தி திறன் மேம்படுத்துவதற்கான முன்மாதிரி செய்து காட்டல்களை ஊக்குவித்தல் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குகனேசபுரம் கிராமத்தில் நேற்று (29) நடைபெற்றது.

வாகரை விவசாயப் போதனாசிரியர் ஆர்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா, விவசாய திணைக்களத்தின் வடக்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் ஏ.சுகந்ததாசன், வாழைச்சேனை கமநல சேவை நிலையத்தின் விவசாய போதனாசிரியர் எம்.ஐ.எம்.ஜமால்டீன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது விவசாயிகளுக்கான புதிய முறையிலான சோளன் நடுகை தொடர்பான செய்முறை விளக்கமும், பசளைப் பயன்பாடு தொடர்பான தெளிவூட்டல்களும் இடம்பெற்றது.

இதன்போது குகனேசபுரம் பிரதேசத்தினை சேர்ந்த விவசாயி ஒருவரால் களைகளை அகற்றுதல், நிலத்தை பண்படுத்தும் மாதிரி உழவு இயந்திரம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டு பரீட்சித்து பார்க்கப்பட்டது.

விவசாயின் கண்டுபிடிப்பு தொடர்;பாக விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் மற்றும் பொது மக்களினால் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், இது ஒரு புத்தாக்க செயற்பாடாகும். (கு)

Related posts

தமிழ் மக்களை மஹிந்தானந்த கொச்சைப்படுத்துகிறார்; சிவிகே கொந்தளிப்பு!

G. Pragas

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani

எதிர்ப்பையடுத்து பிரதேச சபை உறுப்பினரின் மனைவி கைது!

G. Pragas

Leave a Comment