செய்திகள் யாழ்ப்பாணம்

கள்ளச்சாராய “ராசா” கைது!

யாழ்ப்பாணம் – அல்லைபிட்டியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அல்லையூர் ராசா என்பவர் 28 சாராயப் பாேத்தல்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அல்லைப்பிட்டி கிராமத்தில் நீண்டகாலமாக பொதுக்கள், பொது அமைப்புக்களின் எதிர்ப்புக்களை மீறி கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்.

குறித்த நபர் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய தகவலை அடுத்து மண்டைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி விவேகானந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் நேற்று (23) அவரை கைது செய்ய முற்பட்டனர்.

இதன்போது அவ்விடத்தில் கூடிய பெண்கள் அவரை கைது செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்ததால் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இருந்து பெருமளவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதிமன்றில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டதால் பெருமளவு வழக்குகள் நடைபெற்று வருகின்றது. அதில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றில் 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய சம்பளக் கொள்கைக்கான வர்த்தமானி வெளியீடு

Tharani

கண்காணிப்பு கமெராக்கள் வழங்கல்

G. Pragas

அணி மாறுகிறார் அஸ்வின்

G. Pragas