in ,

கவுர் – மந்தனாவின் அணிகள் நாளை இறுதியாட்டத்தில் மோதல்!

பெண்களுக்கான இந்தியன் பிரீமியர் லீக் என்று கூறப்பட்டும் மூன்று அணிகளை கொண்ட ‘பெண்கள் ரி-20 சலஞ்ச்’ தொடரின் இறுதி ஆட்டத்தில் நாளைய தினம் (09) ட்ரய்ப்ளாஷெர் – சுப்பர்நோவஸ் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளவுள்ளன.

நேற்று (07) இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சுப்பர்நோவஸ் – ஸ்மிர்தி மந்தனா தலைமயிலான ட்ரய்ல்ப்ளாஷெர் ஆகிய அணிகள் மோதிய நிலையில், சுப்பர்நோவஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

முதலில் ஆடிய சுப்பர்நோவஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது. அணி சார்பில் சாமரி அத்தப்பத்து (67), ஹர்மன்ப்ரீதி கவுர் (31) ஓட்டங்களை பெற்றனர். ட்ரய்ல்ப்ளாஷெர் சார்பில் ஜாக்லின் கோசுவாமி 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

வெற்றியிலக்கை நோக்கி ஆடிய ட்ரய்ல்ப்ளாஷெர் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களை பெற்று இரு ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. அணிசார்பில் தீப்தி சர்மா (43), ஸ்மிர்தி மந்தனா (33) ஓட்டங்களை பெற்றனர். சுப்பர்நோவஸ் சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

இத்தொடரில் பங்கேற்ற மூன்று அணிகளும் தலா இவ்விரு போட்டிகளில் ஒவ்வொரு வெற்றிகளை பெற்ற நிலையில் நெட் ரண் ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற இரு அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கின்றன.

அத்தியாவசிய ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி!

கமலின் அடுத்த படம் “விக்ரம்”