சினிமாசெய்திகள்பிரதான செய்தி

கஷ்டப்பட்ட வேளையில் இஷ்டப்பட்டு வந்தவள் என்னவள்– ‘குக் வித் கோமாளி’ புகழ்

‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக மக்களிடையே பிரபலமானவர் புகழ்.

அதன் பின் அவருக்கு சினிமா வாய்ப்புக்கள் குவியத் தொடங்கியது. அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

குக்கு வித் கோமாளி புகழ் பென்ஸியா என்கிற இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

பின்னர் புகழே தன் காதலியை ரசிகர்களுக்கு சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகம் செய்தார்.

இந்தநிலையில் புகழுக்கும் பென்ஸிக்கும் எளிமையான முறையில் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

பென்ஸியா இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆரம்பத்தில் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டபோதும் இருவீட்டு சம்மதத்துடனே இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இதுகுறித்து புகழ் தெரிவித்த நெகிழ்ச்சிப் பதிவில்,

‘சிலர் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. எனக்கு அதிர்ஷ்டம்தானானு சொல்லத் தெரியலை.

வாழ்க்கையில ஏதாவது செஞ்சு முன்னுக்கு வந்துட மாட்டோமா என்கிற நினைப்பு எனக்குள்ள இருந்துட்டே இருந்தது. அந்த நினைப்பிலேயே உழைக்கவும் செய்தேன்.

எப்படியோ முட்டி மோதி, விழுந்து எழுந்து போராடினதுல ‘கலக்கப்போவது யாரு’, ‘சிரிப்புடா’னு செய்த அலப்பறைகள்ல என் மூஞ்சியையும் மக்களுக்குப் பிடிச்சுப் போச்சு.

அதுவும் ‘குக்கு வித் கோமாளி’ ஷோவுக்குப் பிறகு வேற லெவல் ரீச். இன்னைக்கு எங்க ஊருக்குப் போய் இறங்கினா அங்க என்னை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்குக் கொண்டாடுறாங்க.
இப்போது சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளேன்.

ஆரம்ப காலத்தில் என்னிடம் ஒன்றும் இல்லாதபோதே பென்ஸி என் காதலை ஏற்றுக் கொண்டவர்.

நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நாங்க இப்போது திருமணமாகி வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு கைக்கோத்து பயணிக்கவுள்ளோம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,213