கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வாகனேரி மக்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாகனேரி கிராம மக்கள் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மிகவும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாகனேரி கிராம சேவகர் பிரிவில் உள்ள பெட்டைக்குளம் கிராம மக்கள் கடந்த யுத்தகாலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களாகும் இக்கிராமத்தில் ஐம்பத்தநாலு குடும்பங்கள் வசித்து வருவதுடன் இவர்களது பிரதான தொழிலாக வீட்டுத் தோட்டம், நண்னீர் மீன் பிடி மற்றும் கூலித்தொழிலாகும்.

பெட்டைக்குளம் கிராமத்தில் நேற்று அதிகாலையும் இரவுமாக இரண்டு நாட்களில் யானைகளின் தொல்லையால் இரண்டு வீடுகள் மற்றும் வீட்டுத தோட்டங்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களிடம் பொருளாதார வசதிகள் இல்லை நாங்கள் வங்கிகளில் கடன்களைப் பெற்று வீட்டுத் தோட்டம் செய்து அறுவடை செய்யும் சந்தர்ப்பங்களில் யானையின் அட்டகாசத்தால் எங்கள் தோட்டங்கள் சேதமாக்கப்படுவதனால் நாங்கள் கடன்களை மீள செலுத்துவதிலும் பல்வேறு சிறமங்களை அனுபவித்து வருதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் வந்து யானை வேலிகள் அமைத்து தருவதாக கூறிச் செல்லும் அரசியல்வாதிகள் அதற்கு பிறகு காண்பதற்கு கிடைப்பதில்லை என்றும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானை வேலிகள் அமைப்பதற்காக பல தடவைகள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ள நிலையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர். (கு)

Related posts

யாழில் திருட முயன்ற திருமலை இளைஞன் வசமாக மாட்டினார்

G. Pragas

முன்னாள் சுங்கப் பணிப்பாளர்களை கைது செய்ய உத்தரவு!

G. Pragas

போலித் துப்பாக்கியை காட்டி ஐதேவை மிரட்டியவரின் தண்டனை இரத்து

G. Pragas

Leave a Comment