in , ,

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் திருமலையில் உண்ணாவிரதம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, திருகோணமலை – அலஸ் தோட்ட பகுதி, இறையிரக்க திருத்தலம் முன்பாக சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம், இன்று (04) காலை 7 மணிக்கு ஆரம்பமானது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டம், சுழற்சி முறையில் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

இன்று நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்ட நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டம் எதற்கு என இதன்போது கேள்வியெழுப்பியதுடன், பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருட்டு சந்தேக நபர் துப்பாக்கி சூட்டில் காயம்!

தமிழர்களின் இருப்பு கேள்விக்கு உள்ளாகியுள்ளது – சுரேஷ்