செய்திகள் பிந்திய செய்திகள் பிராதான செய்தி

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு நோர்வூட்டில் கவனயீர்ப்பு

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாக போராட்டத்திற்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், கவனயீர்ப்பு போராட்டமும் இன்று (01) நுவரெலியா -நோர்வூட் சின்ன எல்பட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கவில்லை. எனவே இதற்கு உரிய தீர்வினை விரைவில் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் போராட்டகாரர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஆசி வேண்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளையும் நடாத்தினர்.

Related posts

முச்சதம் விளாசிய வோனர்; ஆட்டமிழக்க முன்னர் டிக்ளேர் செய்தார் பெயின்

Bavan

கோத்தாவிற்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கியது சட்ட விரோதமானது; நீண்ட விவாதம்

G. Pragas

நோர்வூட் பகுதியில் வௌ்ளம்! மக்கள் பாதிப்பு!

tharani tharani

Leave a Comment