செய்திகள் பிரதான செய்தி

காணாமல் போனவர்களுக்கு நடந்தது என்ன? சர்வதேச நீதிமன்றிடம் கோரிக்கை?

காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்கள் பலர் உள நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாறை தம்பிலுவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பில், நேற்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, காணாமல் போன தமது உறவுகளுக்கு நடந்தது என்ன என்பதை சர்வதேச நீதிமன்றத்திடம் கோரப்போவதாக, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி மேலும் தெரிவித்தார்.

Related posts

மண்சரிவு அபாயம்! 46 குடும்பங்கள் இடமாற்றம்!

Tharani

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் பரிசீலனை

Tharani

ரஞ்சனின் குரல் பதிவுகளை பகிரங்கப்படுத்தவில்லை – பொலிஸ்

G. Pragas

Leave a Comment