கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி மலையகம்

காணாமல் போன பல்கலை மாணவன் சடலமாக மீட்பு!

கடந்த 10ம் திகதி முதல் காணாமல் போயிருந்த நுவரெலியா – அக்கரபத்தனை, ஹோல்புறுக் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மோகன்ராஜ் என்ற கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் இன்று (14) மாலை மட்டக்களப்பு – கரையாக்கன்தீவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ெ

குறித்த தேடும் பணி இன்று (14) நான்காவது நாளாகவும் தொடர்ந்த நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாணவனின் கையடக்க தொலைபேசியை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணையில், கல்லடி பாலத்துக்கு அருகாமையில் வைத்தே இறுதியாக தொலைபேசி இயங்கியுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.

அத்துடன், சீசீடிவி கமரா காட்சிகளும் ஆராயப்பட்டு, தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவும் ஆராயப்படவிருந்தன. இவ்விவகாரத்தை கையாள்வதற்கு தனி காவல்துறை குழு அமைக்கப்பட்டது. எனினும் இன்று குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related posts

புறண்நட்டகல் பகுதியில் முன்னாள் போராளி மரணம்

G. Pragas

கோத்தாபய பின்வாங்க வாய்ப்பு – ராஜித

G. Pragas

திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் – சஜித் வசமானது

G. Pragas

Leave a Comment