கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – ஏறாவூர், களுவங்கேனி நீரோடையில் இருந்து இன்று (27) காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

களுவங்கேனி முதலாம் பிரிவு மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாராகிய மா.ராகினி என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை தனது மகனின் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல்போயிருந்த நிலையில், இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நெருக்கடி நிலைமை தீர்க்கப்பட்டது!

Tharani

அல்லைப்பிட்டியில் முன்னணியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

G. Pragas

இராணுவ வீரருக்கு கடூழிய சிறை!

G. Pragas