பிந்திய செய்திகள்

காணிப் பிரச்சினை; பெண்ணை தாக்கி கொன்ற நபர்!!

இரத்தினபுரி – நிவித்திகலை, கரவிட்ட பகுதியில் காணி உரிமை தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கரவிட்ட கீழ்பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இரு தரப்பினருக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கரவிட்ட – பணுகல்பொத்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவத்தின் போது உயிரிழந்த பெண் மற்றும் காயமடைந்த பெண்ணும், பிறிதொரு தரப்பினரும் காணிவுரிமை விவகாரம் தொடர்பில் வாய்த்தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இது மோதலாக மாறியதில் மது போதையிலிருந்த எதிர் தரப்பு நபரொருவர், அந்த பெண்கள் இருவரையும் இரும்பு பிடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதன்போதே ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றையவர் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,939