செய்திகள்

காதல் விவகாரம்; இளைஞன் கொலை!

காதல் விவகாரத்தால், இளைஞன் ஒருவர் கண்ணாடித் துண்டால் கழுத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் கம்பஹா, கடவத்தைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடவத்தை, கோணஹேனப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய நுவர வீதி, கடவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதல் விவகாரமே, இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,940