செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

காந்­தி­ ஜெயந்தி தினம் யாழில் முன்­னெ­டுப்பு!

மகாத்மா காந்­தி­யின் 153 ஆவது பிறந்­த­தின நிகழ்­வு­கள் யாழ்ப்­பா­ணத்­தில் இன்று (02) இடம்­பெற்­றன.

யாழ். இந்­தி­யத் துணைத்­தூ­த­ர­ கத்­தின் ஏற்­பாட்­டில் இந்த நிகழ்­வு­ கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

யாழ். போதனா மருத்­து­வ­மனை வீதி­யி­லுள்ள மகாத்மா காந்­தி­யின் உரு­வச்­சி­லைக்கு மலர் மாலை அணி­விக்­கப்­பட்டு மரி­யாதை செலுத்­தப்­பட்­டது.

நிகழ்­வில் இந்­திய துணைத்­தூ­தர் ராகேஷ் நட்­ராஜ் ஜெய­பாஸ்­க­ரன், யாழ்ப்­பாண மாவட்டச் செய­லர் க.மகே­சன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் க.வி.விக்­னேஸ்­வ­ ரன், நாடா­ளு­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர் ஈ.சரவணபவன், வடக்கு மாகாண சபை முன்­னாள் உறுப்­பி­னர்­கள், யாழ். மாந­கர சபை பிரதி முதல்­வர், மாந­கர சபை ஆணை­யா­ளர் மற்­றும் அர­சி­யல் சமூகப் பிர­தி­நி­தி­கள், இந்­தியத் துணைத்­தூ­த­ரக அதி­கா­ரி­கள், அகில இலங்கை காந்தி சேவா சங்கப் பிர­தி­நி­தி­கள் எனப் பலர் கலந்­து­கொண்­ட­னர்.

இதன்­போது யாழ்ப்­பாண மாவட்ட செய­லர் க.மகே­ச­ன் ‘காந்­தீ­யம்’ ஏட்டை வெளி­யிட்டு வைக்க அதனை இந்­திய துணைத்­தூ­தர் ராகேஷ் நட­ராஜ் ஜெய­பாஸ்­க­ரன் முதல் பிர­தியை பெற்­றுக்­கொண்­டார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266