செய்திகள் விளையாட்டு

கால்பந்து தொடரை ஒத்திவைக்க தீர்மானம்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக யூரோ 2020 கால்பந்து தொடரானது 2021 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கால்பந்து நிர்வாக குழுவின் முக்கிய பங்குதாரர்களின் நேற்றைய(17) விசேட கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூரோ 2020 கால்பந்து தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெறவிருந்தது.

இந் நிலையில், அந்த கால்பந்து தொடரை 2021 ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 11 திகதி வரையான காலப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

கருணாவுக்கு ருவான் எதிர்ப்பு!

G. Pragas

கருணைபுரத்தில் மனைவியால் கணவன் கொலை!

G. Pragas

“நாங்கள் எதற்கும் தயார்” – ட்ரம்பின் டுவிட்டர் பதிவு

Bavan