செய்திகள் யாழ்ப்பாணம்

காற்றாலை அமைக்க அனுமதி; கைதடியில் போராட்டம்!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, மறவன்புலவு பகுதியில் மக்கள் குடியேற்றத்திற்கு அண்மையில் மின் காற்றாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18) காலை மறவன்புலவு மக்களால் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் மக்கள் சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் நிலையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து போராட்டக் களத்திற்கு விரைந்த ஆளுநர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். அதன் பின்னர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளரை உடனடியாக வருகை தருமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு போராட்டக்காரர்களின் 5 பேரை தன்னுடனான சந்திப்பில் கலந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts

அரசியல் நடவடிக்கைகளில் மீண்டும் சஜித்

reka sivalingam

தேர்தல் குறித்து மைத்திரிக்கு புலனாய்வு தகவல்: பாெலிஸார் மறுப்பு

G. Pragas

உரும்பிராய் மிக்கேல் ஆலயத்தில் பிரமாண்ட கிறிஸ்மஸ் மரம்

G. Pragas

Leave a Comment