செய்திகள்தலைப்புச் செய்திகள்பிரதான செய்தியாழ்ப்பாணம்

கிட்டுபூங்காவில்  மலர்க் கண்காட்சி

வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்கள் இணைந்து நடத்தும் ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கிட்டு பூங்காவில் எதிர்வரும் 27ஆம் திகதிவரை தினமும் காலை 8.30 மணிதொடக்கம் இரவு 7.30 மணிவரை இந்த மலர்க்கண்காட்சி இடம்பெறும்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி  நா.சண்முகலிங்கன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக சமூகச் செயற்பாட்டாளர் ம.செல்வின் இரேனியஸ், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்  ச.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266