செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் தவறுதலாக கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று (3) மாலை இடம்பெற்றுள்ளது.

அராலி கிழக்கு வட்டுக்கோட்டைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 வயதுடைய குகதீசன் நருஜன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் தாயும் தந்தையும் வெளியில் சென்ற நேரம் குறித்த சிறுவன் தனிமையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

வீட்டுக்கு வந்த தாயும் தந்தையும் மகனைக் காணாது தேடிய போது குறித்த சிறுவன் கிணற்றில் மிதந்து கொண்டு இருந்துள்ளார்.

உடனடியாக சிறுவனை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

பொத்துவில் பகுதி கடையில் தீ பரவல்

reka sivalingam

ஓநாய் சந்திர கிரகணம் – (படங்கள்)

G. Pragas

காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் நியமனம்

Tharani

Leave a Comment