in ,

கிண்ணியா – குறிஞ்சா கேணியில் பெரும் சோகம்

படகுப்பாதை கவிழ்ந்ததில்:மாணவர்கள் உட்பட 6 பேர் சாவு!

திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்ததால், அதில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றுக்காலை வழமைபோன்று மாணவர்கள் உட்பட பெற்றோர்கள்சென்றுகொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த படகு பாதையில், பாடசாலை மாணவர்கள் 17 பேர் உட்பட 23 பேர் பயணித்துள்ளனர். பாதை புரண்டதால் தண்ணீரில் மூழ்கியவர்களில் சிலர் நீந்தி கரைசேர்ந்தனர். 16 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைகளுக்காக கிண்ணியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால் கிண்ணியா- குருஞ்சான்குளம் பகுதிகளுக்கிடையே குறித்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.

தினமும் குறித்த பாதை படகின் ஊடாக நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று இந்த துயரம் இடம்பெற்றது

திருகோணமலையில் ஏற்பட்ட துயரம்!இழுவைப்படகு கவிழ்ந்து 7 பேர் மரணம்!

வீதிகளை மறித்து; மக்கள் ஆர்ப்பாட்டம்!