in , ,

கிருஷாந்தி உள்ளிட்டோரின் 24ம் ஆண்டு நினைவேந்தல்

இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கு.கிருஷாந்தி மற்றும் அவரது தாய், சகோதரன், அயலவர் உள்ளிட்டோரின் 24ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (07) யாழ்ப்பாணம் – செம்மணியில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூறப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் சி.சித்தார்த்தன் எம்பி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான, பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1996ம் ஆண்டு 7ம் திகதி யாழ் சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் அம்மாணவியை பாலியல் வன்புணர்வின் உட்படுத்தி படுகொலை செய்திருந்தனர்.

அத்துடன் மாணவியை தேடிச் சென்ற தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா, மாணவியின் சகோதரனும், யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோரும் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளையான் மீண்டும் முன்னிலை!

கிருஷாந்தியின் படுகொலையும்; வெளிவந்த செம்மணிப் புதைகுழி உண்மைகளும்!