கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

கிளிநொச்சியில் சிக்கிய வர்த்தகர்கள்

கிளிநொச்சியிலுள்ள பல வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதோடு,  பொருட்களை பதுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கிடைத்த தகவலையடுத்து இன்று (09) விலைக் கட்டுப்பாட்டு பிரிவினர், பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாக, சில வர்த்தகர்கள் பிடிபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட விலைக்கட்டுப்பாட்டு பிரிவினர், பொலிஸார், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் கிளிநொச்சியில்  சில மொத்த வியாபார நிலையங்களுக்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர். 

இதன்போது பதுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களான  பருப்பு, ரின் மீன், அரிசி போன்ற பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதோடு, அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்கள் சிலரை பிடித்துள்ளனர்.

Related posts

எரிபொருள் விலை – ஒரு வருடத்திற்கு குறையாது!

G. Pragas

தேரர்களின் அராஜகத்தை கண்டித்து நாளை போராட்டம்!

G. Pragas

அரசின் நோக்கம் 60 நாட்களிலேயே தெளிவாகியுள்ளது – வேலு

reka sivalingam