in , ,

கிளிநொச்சி, முல்லைத்தீவில் மணல் விலைஅதிகரித்தமை எதற்காக?

உள்ளூரில் மணல் விலைஅதிகரித்தமை எதற்காக? அதிகாரிகளைத் தலையிடுமாறு
வீடு கட்டுவோர் கோரிக்கை!

உள்ளூர் தேவைக்கு மணலைப் பெறுவதுகூட பெரும் இடர்பாடாகியுள்ளது. தவிர, ஓர் உழவியந்திர மணலின் விலை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது. அதனால் உள்ளூர்வாசிகளான தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, விலையைக் குறைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தமது வீட்டுத்தேவைகருதி ஒரு கீப் மணலைக்கூடப் பெறமுடியாத நிலை காணப்படுகின்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இதே நிலைமையே காணப்படுகின்றது.
தமது கிராமங்களிலிருந்து 2 கிலோமீற்றர் அல்லது 3 கீலோமீற்றர் தூரமளவில் மணல் உள்ளபோதிலும் மணலைப் பெறமுடியாதுள்ளது. மணலைப் பெறக்கூடியதாக இருந்தாலும், ஓர் உழவியந்திர மணல் சில நாள்களுக்கு முன்னர் வரை 6 ஆயிரம் ரூபாவாக இருந்தநிலையில், தற்போது 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டள்ளது.

இதனால், நாட்டில் அத்தியாவசியப்பொருள்களின் விலை அதிகரிப்பதென்றால், மணல் விலையை ஏன் அதிகரிக்கவேண்டும்? வெளிமாவட்டங்களுக்கு மணல் கொண்டுசெல்லப்படுகின்றது. ஆனார் உள்ளூரில் மணலைப் பெற முடியவில்லை. பலர் அதிக விலைகொடுத்தே மணலைப் பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது.
எனவே, மணலுக்கு உரிய விலையை அதிகாரிகள் வரையறை செய்யவேண்டும். உள்ளூரில் மணலைப்பெற்று தமது வீட்டுத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

மன்னாரில் ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனாத் தொற்று!

நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!