கிளிநொச்சி செய்திகள் பிராதான செய்தி

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் பலி! நால்வர் படுகாயம்!

கிளிநொச்சி – ஏ-9 வீதியில் இன்று (20) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்..

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 156ம் கட்டை பகுதியின் ஏ9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து பயணித்த வான் மீது எதிர் திசையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

டிப்பர் வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை விபத்தில் சிக்கிய வான் மூன்றுமுறை தடம்புரண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மூவர் உட்பட ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த மூவரில் வசாவிளானை சேர்ந்த க.இரத்தினம் என்பவர் வைத்தியசாலையில் பலியானார்.

Related posts

இரண்டாவது நாளாகத் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு

thadzkan

பயங்கரவாத பழிசுமத்தி கைது செய்யக் கோரினர்

G. Pragas

பாலிதவை விடுதலை செய்ய வலியுறுத்தி கோட்டையில் கவனயீர்ப்பு

G. Pragas

Leave a Comment