கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

கிளியில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைப்பு!

கிளிநொச்சி நகரிற்கு, 12.2 மில்லியன் ரூபாய் செலவில் நவீன பொது வசதிகள் மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (01) காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

உலக வங்கியின் நிதி உதவியுடன் நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறித்த பொது வசதிகள் மையம், நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டு இன்று கரைச்சி பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி சேவைச்சந்தையின் ஒரு பகுதியில் கனகபுரம் வீதியில் குறித்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொது சேவையை பெற்றுக்கொள்ளும் வகையில் நவீன முறையில் குறித்த பொது வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் பொது மலசலகூடம், பாலூட்டும் அறை, குளியளறை உள்ளடங்கலாக குறித்த பொது வசதிகள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Related posts

ரிப்கானின் மறியல் நீடிப்பு!

Tharani

திருகோணமலை பேருந்து நிலையத்தில் 8 வயது சிறுமி கடத்தல்!

Tharani

நெல்லியடி பகுதியில் கஞ்சாவுடன் கார்; நால்வர் கைது!

G. Pragas