in ,

கிளி. ஊடகவியலாளர்கள் – இளம் ஊடகவியலாளர் சங்கம் சந்திப்பு!

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினருக்கும், கிளிநொச்சி ஊடகவியலாளர்களிற்கும் இடையில் இன்று (11) விசேட நட்புறவு கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் சிங்கள ஊடகவியலாளர்களிற்கிடையிலான நட்புறவை அதிகரித்தல், ஊடக தொழில்துறைசார் விடயங்களை மேம்படுத்தல், தமிழ் சிங்கள இன நல்லிணக்கத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன் போது தமிழ் சிங்கள் இளம் ஊடகவியலாளர்களிற்கு 2ம் மொழி அறிவினை மேம்படுத்தல், தமிழ், சிங்கள, இஸ்லாமிய ஊடகவியலாளர்களை தெற்கு மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளிற்கு சென்று நட்புறவை வளர்த்தல், தமிழ் சிங்கள மக்களின் அடி்ப்படை பிரச்சினைகளை அடையாளம் கண்டு இரு தரப்பினருக்குமான உண்மை நிலையை தெளிவுபடுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உள்ளிட்ட திட்டங்கள் ஆராயப்பட்டு அவற்றை நடைமறைப்படுத்தவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

வலி வடக்கில் ஒரு வருடமாக திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

ஜீவனுக்கு நாவடக்கம் வேண்டும் – இராதா