கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் யார்? – தீர்ப்பளித்தார் இளஞ்செழியன்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ஜ.எம்.மன்சூர் தொடர்ந்தும் கடமையாற்ற முடியும் என்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (01) காலை தீர்ப்பளித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இருந்தபோது மன்சூரை இடம்மாற்றி மாகாணப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிஸாமை நியமித்தார்.

இந்நிலையில், மன்சூரால் மேற்படி நியமனத்துக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் இன்றையதினம் (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, எம்.ஐ.எம்.மன்சூரை தொடர்ந்தும் கடமையாற்றுமாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.

“அரசியல் யாப்பின் 13ம் திருத்தத்திற்கு அமைய ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை மீறி ஹிஸ்புல்லா செயற்பட்டுள்ளார் என்பதுடன், தனது சொந்த விருப்பு வெறுப்பினை நிறைவேற்ற தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் எனவும், இது இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கு முரணானது எனவும் நீதிபதியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது”. என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன!

reka sivalingam

கஞ்சிப்பானயின் தந்தை உள்ளிட்ட அறுவருக்கு விளக்கமறியல்

G. Pragas

14,021 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் அபிவிருத்தி திட்டம்

Tharani