செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

கீரிமலை வெடிப்பு சம்பவம்; காயமடைந்தோர் உட்பட நால்வர் கைது!

யாழ்ப்பாணம் – கீரிமலை, கூவில் பகுதியில் நேற்று (12) குப்பைக்குள் இருந்த வெடி பொருளை வெடிக்க வைத்ததாக, அதில் காயமடைந்த மூவர் உட்பட நால்வர் இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

“குப்பைக்குள் காணப்பட்ட பற்றியுடன் கூடிய வீரியம் குறைந்த வெடிபொருள் ஒன்றை நால்வரும் கண்டெடுத்து, நெருப்பு வைத்த போது அது வெடித்துள்ளது. அதன்போது மூவரின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக வெடி பொருளை வெடிக்க வைத்ததுடன், அதன் பின்னர் ஓடி ஒழித்தனர். அதனால் பொலிஸாரும் இராணுவத்தினரும் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது நால்வரும் கைது செய்யப்பட்டனர்.” – என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொரோனா வைரஸ் தாக்கம்! அரசை குற்றம் சுமத்தும் சஜித்

Tharani

வரலாற்றில் இன்று – (11.06.2020)

Tharani

கனடாவில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

கதிர்