in ,

குடிதண்ணீருக்காக 30 வருடங்கள் போராடும் புதுக்காடு தோட்ட மக்கள்

ஹட்டன்- பலாங்கொடை பின்னவல புதுக்காடு தோட்டத்தில் கடந்த 30 வருட காலமாக போதிய குடிதண்ணீர் வசதியின்றி மக்கள் பல்வேறு அசெளகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதனால் பின்னவல புதுக்காடு தோட்டத்தில் வசிக்கின்ற சுமார் 120 குடும்பங்களை சேர்ந்த 500ற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டத்தில் தொழில் செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் குடிதண்ணீரின்றி அதிக அளவு கஷ்டங்களை எதிர் கொண்டு வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தோட்ட நிர்வாகம் தோட்ட குடியிருப்புகளுக்கு காலை, மாலை ஒரு மணித்தியாலம் மட்டும் குடிதண்ணீரை விநியோகித்து வருவதாகவும் இது தமக்கு அன்றாட தேவைகளுக்கு போதுமானதாக இல்லை எனவும் மக்கள் தெரிவித்தனர்.

தோட்டத்துக்கு வேலைக்கு சென்று வந்து குடிதண்ணீர் வசதி இன்மையால் மழை காலங்களில் மழை தண்ணீரை பெற்று அதனை வடித்து தமது பிள்ளைகளுக்கு வழங்குகின்றனர். இதனால் அவர்கள் அடிக்கடி நோய்களுக்கு உள்ளாவதாகவும் கவலையுடன் தெரிவித்தனர். சில சமயங்களில் ஆற்று தண்ணீரை மழை காலத்தில் பெற்றுக் கொள்கின்ற போதிலும் வறட்சி காலத்தில் ஆற்று தண்ணீர் வற்றி விடுவதால் தாம் பெரும் இன்னல்களை அனுபவித்து வருவதாக அங்கலாய்கின்றனர்.

நீர்வீழ்ச்சிகள் அதிகமுள்ள பகுதியாக இரத்தினபுரி மாவட்டம் உள்ளபோதிலும் மலையக தோட்டத் தொழிலாளர்களான நாம் குடிதண்ணீரின்றி கடந்த 30 வருட காலமாக பல கஷ்டங்களை எதிர்கொண்டு வருகிறோம்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோட்ட மக்கள் சுத்தமான குடிதண்ணீரை பெற்றுக் கொள்ள ஆவணம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் மீண்டும் முடக்கம் | ஓரிரு வாரத்தில் விளைவு | அதிர வைக்கும் டெல்ரா தகவல்கள் Uthayan TV

மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி கொள்வனவு