செய்திகள் பிரதான செய்தி

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுக்கும் அறிவிப்பு!

வரட்சி காலநிலையின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேச நீர் மற்றும் குடிநீர் வளப்பகுதி குறைவடைந்து வருகின்றமையால் குடிநீர் விநியோகத்தை வரையறுப்பதற்கான அவசியம் ஏற்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அடிக்கடி ஏற்படும் நீர் விநியோக வரையறை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்கு வாடிக்கையாளர்கள் தமது நீர் கட்டண பற்றுச்சிட்டு இலக்கத்தை 071-9399999 என்ற கையடக்க தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தியை அனுப்புவதன் மூலம் பதிவு செய்து கொள்ள முடியும் என்று சபை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக சுட்டிக்காட்டி நீரை சிக்கனமான முறையில் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்ற கூட்டத் தொடர் 1 மணி வரை ஒத்திவைப்பு

reka sivalingam

பிரிந்தவர்கள் மீள கூட்டமைப்புக்குள் வர வேண்டும்!

G. Pragas

22 கோடி பெறுமதியான சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.