in ,

குட்டிமணியை கொன்றது ஞாபகம் இருக்கின்றதா? என கேட்டு அசேல மீது தாக்குதல்!

பந்துல குணவர்த்தனவின் 1000 ரூபா பொதி சர்ச்சையின் பின்னணியில், இரு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பை காரணமாக்கி கடந்த 13ம் திகதி கைது செய்யப்பட்டு 19ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்ட அகில இலங்கை சிற்றூண்டிச்சாலைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத், சிறையில் வைத்து சிறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டுள்ளார்.

இதனை அவரது மகள் ஆக்ரா தினேந்திரி, மக்கள் சக்தி அமைப்பின் சுதேஷ் நந்திம சில்வா ஆகியோர் வெளிப்படுத்தியதுடன், சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவும் அறிக்கையிட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணை நடத்த சிறை கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விபரித்த மக்கள் சக்தி அமைப்பின் சுதேஷ் நந்திம சில்வா,

‘எமது அமைப்பின் உப தலைவர் அசேல சம்பத்தின் வாயை அடைப்பதற்காக சதித் திட்டமிட்டு அவரை சிறையிலிட்டனர். 19ம் திகதி அவருக்கு பிணை வழங்கி, தனிமைப்படுத்தலுக்காக போகம்பரை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் பகுதிக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு 20ம் திகதியன்று சிறைச்சாலை பொறுப்பதிகாரி ஜகத் என்பவருடன் மேலும் இரு அதிகாரிகள் இணைந்து அவரை தாக்கினர். எதன் தலைவராக இருந்தாலும் பரவாயில்லை ரஞ்சனுக்கும் சேர்த்தே எச்சரிக்கை விடுக்கின்றோம்.

வெளியில் ஆடும் ஆட்டம் இங்கு செல்லாது ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்தில் குட்டிமணியை எவ்வாறு கொன்றோம் என ஞாபகம் இருக்கிறதா என்று அச்சுறுத்தும் விதமாக கேட்டனர்.

இது போன்ற சிறை அதிகாரிகள் குட்டிமணியை போன்றே அசேலவையும் நடத்தினர். நாட்டு மக்களுக்கு நஞ்சூட்ட கூடாது என்று போராடிய எமது சகோதரரை பந்துல குணவர்தனவின் தேவைக்காக சிறையிலிட்டனர்.’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார விதி மீறல்:- வண்ணார்பண்ணை அம்பாள் ஆலய நிர்வாகத்தினர் கைது!

நாட்டில் ஒரே நாளில் கொரோனா தாண்டவம் – 1,466