in ,

குண்டெறிதலில் 31 வருடங்கள் நீடித்த உலக சாதனையை முறியடித்த குருசர்

இயூஜின் விளையாட்டரங்கில் வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்க மெய்வல்லுநர்களுக்கான ஒலிம்பிக் திறன்காண் போட்டியில் ஆண்களுக்கான குண்டெறிதலில் ஒலிம்பிக் சம்பியன் ரெயான் குரூசர் 23.37 மீற்றர் தூரம் குண்டை எறிந்து நீண்டகால சாதனையை முறியடித்தார்.

உலக மெய்வல்லுநர் போட்டிகளில் குண்டெறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ரெயான் குரூசர், இந்த வருட முற்பகுதியில் உள்ளக அரங்குக்கான குண்டெறிதலில் உலக சாதனை நிலைநாட்டியிருந்தார்.

தகுதிகாண் சுற்றின் முதல் முயற்சியில் 22.92 மீற்றர் தூரத்துக்கு குண்டை எறிந்த குரூஸ், 6 மணித்தியாலங்கள் கழித்து நடைபெற்ற இறுதிப் போட்டியை முதல் முயற்சியில் 22.61 மீற்றர் என்ற தூரப் பெறுதியுடன் ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து குரூசர் 22.55 மீற்றர், 22.73 மீற்றர் தூரங்களைப் பதிவு செய்தார்.

அவர் தனது 4ஆவது முயற்சியில் 23.37 மீற்றர் தூரத்துக்கு குண்டை எறிந்து புதிய உலக சாதனையைப் படைத்தார்.

இதன் மூலம் 31 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ஒலிம்பிக் சம்பியன் ரெண்டி பார்ன்ஸினால் நிலைநாட்டப்பட்டிருந்த 23.12 மீற்றர் என்ற உலக சாதனையை ரெயான் குரூசர் முறியடித்தார்.

திடீர் அறிவிப்பு | நாட்டின் பல பகுதிகள் முடக்கம் | யாழில் இந்திய டெல்ரா! | பறந்து வரும் பஸில் சுகாதார நிபுணர்கள் கடும் எதிர்ப்பு!

தந்தையின் வாள்வெட்டுக்கு இலக்காகி 6 மாத சிசு மரணம்! இருவர் காயம்!