கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

கும்புறுமூலை தொழில் பயிற்சி நிலையத்தை பார்வையிட்ட மௌலானா

ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை கும்புறுமூலை கிராமகேசகர் பிரிவில் விசேட தேவையுடையவர்களுக்காக நிர்மானிக்கப்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டுமான பணிகளை இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலான இன்று (02) நேரில் சென்று பார்வையிட்டார்.

இம்மாதம் நடுப்பகுதியளவில் இவ் தொழிற்பயிற்சி நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த தொழிற்பயிற்ச்சி நிலைய திறப்பு விழாவிற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் வாழைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது தொழிற்பயிற்ச்சி நிலையத்திற்கான வீதி,மின்சாரம்,குடிநீர் வசதி,உட்பட பல்வேறு தேவைகளை துரிதமாக நிறைவேற்றி தருவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அமைச்சரினால் பணிப்புரை விடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், சமூகசேவை திணைக்கள பணிப்பாளர் எஸ்.இராமமூர்த்தி, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் எஸ.ராஜ்பாவு, மற்றும் மாவட்ட செயலக உதவி பிரதேச செயலாளர் என்.நவேஸ்வரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

விபத்தில் குடும்பஸ்தர் பலி!

G. Pragas

தேர்தலை நடத்தும் சுகாதார வழிகாட்டல்கள் கையளிக்கப்படவுள்ளது

G. Pragas

யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை!

Tharani