செய்திகள் பிரதான செய்தி வானொலி

குரலுக்கு வளம் – 2020: ஒலிபரப்பாளராவதற்கு வாய்ப்பு

அடுத்த தசாப்தத்திற்கு ஏற்ற ஒலிபரப்பாளர் சந்ததியினை உருவாக்கிடும் நோக்கில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் குரலுக்கு வளம் நிகழ்ச்சித் திட்டத்தினூடாக தகுதி வாய்ந்தவர்களை இணைந்துக் கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரம் அல்லது க.பொ.த உயர்தரம் சித்திபெற்ற  18 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் திறன் வாய்ந்த ஒலிபரப்பாளராவதற்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்ப படிவங்களை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிரதான காரியாலயத்திலும் யாழ், பிறை, றுகுணு, ரஜரட்ட, கந்துரட்ட, வயம்ப, தம்பானை ஆகிய பிராந்திய ஒலிபரப்பு சேவை காரியாலயங்களிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ www.slbc.lk இணையத்தளத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

சுயவிபரங்களுடன் கூடிய விண்ணப்பத்தினை மார்ச் 14 க்கு முன்னர் குரலுக்கு வளம் – 2020 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கொழும்பு 07 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கேட்டுள்ளது.

Related posts

பெருந்தேசிய வாதத்தில் இருந்து எமது அரசியலை வென்றெடுக்க வேண்டும்!

Tharani

கட்டுநாயக்கவில் 5 பேர் கைது

reka sivalingam

அனர்த்த மீட்பு தோணிக்கு நடந்தது என்ன?

G. Pragas

Leave a Comment