in , ,

குருந்தூர் மலையில் சூலம் பிடுங்கப்பட்டு; புத்தர் சிலை வைத்து ஆக்கிரமிப்பு ஆரம்பிப்பு!

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் ஆதிய ஐயனார் சூலம் பிடுங்கப்பட்டு, அதே இடத்தில் புத்தர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டு, தொல் பொருள் ஆராய்ச்சி பணிகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயவினால் இன்று (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை குருந்தூர் மலைப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சருடன், தொல்பொருள் திணைக்களத்தின் செயலாளர், விரிவுரையாளர் அருண மனதுங்க, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத்தளதி மேஜர் ஜெனரல் ரத்நாயக்க, தொல்பொருள் திணைக்கள மற்றம் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த குருந்தூர் மலையில் விகாரை அமைக்க முற்பட்ட போது அதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து, தமது தொல்பொருள் இடமாக அதை நிறுவி, புத்த விகாரை அமைக்கும் நோக்குடன் அகழ்வராய்ச்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகிறார்கள்.

நேற்று அந்த பகுதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி எம்.பிக்கள் சென்றபோது ஊடகவியலாளர்கள் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை.

பியல் நிசாந்தவுக்கு கொரோனா!

மூடப்பட்ட பொது சந்தைகள் மீள திறப்பு!