கிழக்கு மாகாணம்செய்திகள்

குறிஞ்சாகேணி விபத்து: மேலும் ஒருவர் மரணம்!

கிண்ணியா, குறிஞ்சாகேணி படகு விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.

இந்த உயிரிழப்புடன் படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
குறிஞ்சாகேணியைச் சேர்ந்த எஸ்.ஹாலிசா (வயது-40) என்ற பெண்ணே உயிரிழந்தார்.

விபத்தில் பாதிக்கப்பட்ட இவர் கிண்ணியா மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கிருந்து அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்படவிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, இவரது 6 வயது மகனான பரிஸ் பஹிர் படகு விபத்து நடந்த அன்று உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051