உலகச் செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

குற்றத்தை ஒப்புக் கொண்ட கிறைஸ்ட்சேர்ச் பயங்கரவாதி!

நியூஸிலாந்து – கிரைஸ்ட்சேர்ச் (Christchurch) நகரில் கடந்த வருடம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்ககுதலின் சூத்திரதாரி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த வருடம் நியூஸிலாந்தின் இருவேறு முஸ்லிம் வழிபாட்டுத் தளங்களில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகங்களில், 51 பேர் கொல்லப்பட்டனர்.

அவுஸ்திரேலிய பிரஜையான பிரென்டன் டெரண்ட் என்பவரே இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டிருந்ததுடன், அதனை பேஸ்புக் மூலமாக நேடியாக பதிவேற்றியிருந்தமை கடும் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது.

இந்த நிலையில், நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச் மேல் நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை கடந்த ஒரு வருட காலமாக முன்னெடுத்திருந்தது.

நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, 51 பேர் மீதான கொலைக் குற்றச்சாட்டுகள், 40 பேரை கொலை செய்ய முயன்றமை தொடர்பிலான குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு பயங்கரவாத குற்றச்சாட்டு ஆகியவற்றை பிரென்டன் டெரண்ட் ஏற்றுக் கொண்டார்.

எனினும், இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணைகளின்போது அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக மறுத்திருந்தார்.

நியூஸிலாந்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, குறிப்பிட்ட நபர்கள் மாத்திரமே விசாரணைகளுக்கு அனுமதிக்கப்பட்டதுடன், பிரென்டன் டெரண்ட்டின் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் காணொளி மூலமாக முன்னிலையாகியிருந்தனர்.

இதனை அடுத்து அவர் ஏற்றுக் கொண்டுள்ள 92 குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாவிதன்வெளி பிரதேச சபையில் சுதந்திரதின நிகழ்வு

G. Pragas

கொரோனா நோயாளர்களை கொண்டு வருவதை கண்டித்து போராட்டம்!

reka sivalingam

தமிழர் விரோதச் செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் நிறுத்த வேண்டும்- சித்தார்

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.