ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சர்வாதிகாரியின் பங்கை வகித்து செயற்படுவார் என்று எதிர்பார்த்தே மக்கள் அவருக்கு வாக்களித்தனர். ஆனால், இன்று அரசாங்கத்தின் முன்னேற்றமின்மை தொடர்பில் அவரை குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலை மாறாவிட்டால் அது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவை ஒரு ஹிட்லராக மாறக் கட்டாயப்படுத்தும்.
இவ்வாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று (12) கண்டியில் வைத்து தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஜனாதிபதி ஹிட்லராக மாறினால் அரசு மீது பழி சுமத்தப்படுவதும் நின்றுவிடும். அத்தோடு அனைத்து செயற்பாடுகளும் சரியாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.