செய்திகள்

குற்றவியல் சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி!

1979ம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure Act) திருத்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றத்திற்கு சிறைக்கைதிகளை அழைத்து செல்லும் பொழுது சமீபகாலத்தில் இடம்பெற்ற வேண்டத்தகாத மற்றும் வன்முறை சம்பவங்களை எதிர்காலத்தில்தடுக்கும் வகையில் விளக்கமறியல் சிறைச்சாலைக்கு உட்படுத்துவதற்கு அமைவாக உத்தரவை நீடிப்பதற்கான சந்தேக நபர்கள் அல்லது குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜராவதற்கான தேவையை நீக்குவதற்கு நீதிவானுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக திருத்தம் செய்யவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையை கவனத்திற்கொண்டு இணையத்தள (Audio Visual Media) காணொளி ஊடக தொடர்பை பயன்படுத்தி கைதிகள் மற்றும் சந்தேக நபர்களுக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான வசதிகளை செய்வதற்கும்,

ஏனைய வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தற்பொழுது புனர்வாழ்வளிக்கபட்டுவருவோருக்கும், சந்தேக நபர்களுக்கு இவ்வாறான வசதிகளை செய்து கொடுக்கக்கூடிய வகையில் 1979 ஆம் ஆண்டு இலக்கம் 15 இன் கீழான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Codeof Criminal Procedure Act) திருத்தங்களைமேற்கொள்ளுவதற்கும்,

அதற்கமைவாக யாப்பு திருத்த சட்டமூலத்திற்கான சட்ட திருத்தமூலவரைபு பிரிவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

“மனப்பாரம்” நூல் வெளியீட்டு விழா இன்று

Tharani

குடத்தனையில் தடைவைத்து கண்காணிக்கும் இளைஞர்கள்!

reka sivalingam

ஏமாற்று வேலை செய்கிற தலைவர்களையே காண்கிறோம் – மணிவண்ணன்

G. Pragas