in ,

குளிப்பதை வீடியோ எடுத்த நபர்கள் – செருப்பை வைத்து பொலிஸார் விசாரணை!

திருகோணமலை – ரொட்டவெவ கிராமத்தில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் கல்லெறிதல் மற்றும் பெண்கள் குளிப்பதை படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேற்றிரவு (11) பெண்ணொருவர் தனது வீட்டுக் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, நால்வர் கொண்ட குழு, அலைபேசியில் வீடியோ எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது, அயலவர்கள் அக் குழுவினரை துரத்திச் சென்ற போது தப்பித்துள்ளனர்.

பெண்ணின் உறவினர்கள் மொரவெவ பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், தப்பியோடியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் வளவுக்குள் காணப்பட்ட சந்தேக நபர்களின் செருப்புகளை எடுத்துச் சென்றுள்ளனர்.

பார்த்திபனின் படத்திற்கு இசையமைக்கும் ரஹ்மான்!

ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை விலையில் மாற்றம்!