உலகச் செய்திகள் செய்திகள்

குளாேரோகுயின் மருந்து சோதனையை இடை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்

மலேரியாவுக்கு பயன்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் இடைநிறுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி இதுவரை குளோரோகுயின் மருந்தை வைத்து அதிக சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் சோதனை செய்யப்படுகிறது.

‘இந்த முடிவுகளுக்கான புள்ளி விவரங்களை உலக சுகாதார நிறுவனத்தின் டேட்டா பாதுகாப்பு சோதனை மையம் சோதனை செய்து வருகிறது. அந்த முடிவுகள் வந்த பின் குளோரோகுயின் குறித்து அறிவிப்போம்.

அதுவரை குளோரோகுயின் மருந்தை கொரோனா பாதிப்பிற்கு மருந்தாக கொடுப்பதையும், அதில் மருத்துவ சோதனைகள் செய்வதையும் நிறுத்த வேண்டும்’ என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குளோரோகுயின் மருந்து கொரோனா வைரஸ் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினாலும் மாரடைப்பு போன்ற சிக்கல்களுக்கு இட்டுச்செல்வதால் கவனமாக பயன்படுத்த வேண்டும் ஆய்வாளர்கள் சிலரால் எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில் லான்சட் மருத்துவ ஆய்விதழ் கடந்த வெள்ளிகிழமை வெளியிட்ட ஆய்வு முடிவுகளின் படி குளோரோகுயின் மருந்து பாதுகாப்பானதல்ல என்றும், இருதய நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரித்திருந்தது.

இவ்வாறான நிலையிலேயே குறித்த மருந்து பரிசோதனையை உலக சுகாதார நிறுவனம் இடைநிறுத்தியுள்ளது.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி

Tharani

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு; பெப்ரவரியில் நேர்முகத் தேர்வு

reka sivalingam

மத சுதந்திரம் உடைய கலாச்சாரத்தை மாணவர்களின் ஊடாக உருவாக்கல்

G. Pragas