செய்திகள் பிந்திய செய்திகள்

குழந்தையை வயலில் விட்டுச் சென்ற தாய் உட்பட மூவர் கைது

மடுல்சீம – மெட்டிகஹதென்ன பகுதியில் உள்ள வயலொன்றில் தமது குழந்தையை கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் நேற்று (13) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெட்டிகஹதென்ன கிராமத்தை சேர்ந்த குழந்தையொன்று வயல்வெளியில் அழுதுகொண்டிருந்ததை அவதானித்த கிராமவாசிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

துணிப்பையுடன் 20 மாதங்களான குறித்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, குழந்தையின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இந்த ஆண்டில் 11 ஆயிரம் பேருக்கு டெங்கு!

Tharani

யாழ்ப்பாணமும் சேர்த்து மொத்த எண்ணிக்கை 159 ஆனது!

Bavan

வியாபார அனுமதிப் பத்திரத்தைப் பெறவும்

கதிர்