குழந்தை பெற்றெடுத்த திருநங்கை– திருநம்பி தம்பதி!

அமெரிக்கா– கொலம்பியாவை சேர்ந்த திருநங்கை -– திருநம்பி தம்பதி இயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை ஒன்றை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மொடல் அழகியான மனைவி டான்னா சுல்தானா ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை ஆவார். அவரது கணவர் எஸ்டெபன் லாண்ட்ரா பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய திருநம்பி ஆவார்.

இவர்கள் இவரும் இயற்கை முறையில் குழந்தை ஒன்றை பெற்றெடுக்க முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி கணவர் எஸ்டெபன் லாண்ட்ரா இயற்கை முறையில் கர்ப்பம் தரித்து ஆண் குழந்தை ஒன்றை பெற்றெ பெற்றெடுத்துள்ளார்.

தனது கணவர் கர்ப்பமாக இருக்கும் ஒளிப்படங்களை சுல்தானா சமூக வலைதளங்களில் பதிவிட்டும் இருந்தார்.

இந்த சம்பவம் பலரையும் குழப்பத்திலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னரும் 2020ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இவ்வாறான தம்பதியொருவர் இயற்கை முறையில் குழந்தை பெற்றெடுத்தனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version