சினிமா செய்திகள்

குஷ்புவுக்கு கஸ்தூரி பாராட்டுமழை

நடிகை குஷ்பு மும்பையில் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், டைரக்டர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு இந்துவாக மாறி விட்டார். இந்நிலையில், சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய போட்டோக்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து நடிகை கஸ்தூரி ஒரு டுவிட் வெளியிட்டிருந்தார். அதில், இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இந்து குடும்பத்தில் மருமகளாகி, இரண்டு மதங்களின் நம்பிக்கைக்கும் உண்மையாக குஷ்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதையடுத்து கஸ்தூரியின் அந்த டுவிட்டிற்கு நன்றி தெரிவித்த குஷ்பு, கஸ்தூரியின் அந்த டுவிட்டை வேறுமாதிரியான திருத்தம் செய்து இன்னொரு டுவிட் வெளியிட்டுள்ளார். அதாவது, மும்பையில் பிறந்த ஒரு இந்திய பெண் தமிழகத்தின் அடையாளமாகி இருக்கிறார். ஒரு சக இந்தியரை மணந்து மதச் சார்பின்மையையும், மனிதநேயத்தையும் நிலைநாட்டியிருக்கிறார். என்னுடைய இந்திய தேசம் இது. சாதியும், மதமும் உண்மையான அன்புக்கிடையே வர முடியாது. உண்மையான கடவுள் அன்புதான் என்று டுவிட் வெளியிட்டுள்ளார் குஷ்பு.

Related posts

இந்த ஆட்சியின் பலனே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்

G. Pragas

இதுவா சிறந்த தலைமைத்துவம்? கோத்தாவை தாக்கிய சஜித்!

G. Pragas

இரும்பக உரிமையாளர் கொலை! சந்தேக நபர் விடுதலை

G. Pragas

Leave a Comment