in , ,

கூட்டமைப்பை விட்டு சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுச் சென்றவர்கள் அந்தக் கட்டமைப்புக்குள்ளே மீண்டும் வந்து இணைந்து ஒற்றுமைப்பட வேண்டும். போராட வேண்டும். அதனை விடுத்து புதிய அமைப்பை, கட்சியை உருவாக்குவது ஒரு ஏமாற்று வேலைத்த திட்டமாகவே இருக்கும் என்று அம்பாரை மாவட்ட முன்னாள் எம்பி சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இன்று (5) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

“பல கட்சிகளாக நாங்கள் பிரிந்து போகப் போக பேரினவாத சக்திகளுக்கும் அரசுக்கும் எங்களைப் பிரிப்பதற்கு இலகுவாகிப் போய்விடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டபோது எங்களது பலம் சிறப்பாக இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அப்போது 22 ஆக இருந்து இப்போதைய நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பாகப் போனதாகத்தான் பார்க்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் எம்மிடம் இருக்கும் கட்சி, அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காகச் சிந்தித்து செயற்பட வேண்டியது காலத்தின் அவசியம்.

பல கட்சிகளும் பல தீர்மானங்களை எடுப்பதனால் மக்களும் குழம்பி, எல்லோரும் குழம்பி, எதிர்கால சந்தததியினரும் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானது என்னவென்றல் யுத்தங்கள், இறுதி யுத்தம் நடைபெறும் வேளையில் மௌனிகளாக இருந்துவிட்டு, எதிர்வரும் தேர்தல் காலங்களுக்காக தங்களைப் பிரபலப்படுத்தவதற்காக தேர்தல் களத்தில் குதிப்பதற்காக இவ்வாறான அமைப்புக்களை உருவாக்கி அதில் முன்பு ஒளித்துக் கொண்டிருந்தவர்களைக் கொண்டுவந்து தலைவராக்குவது ஒரு வீண் செயல்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுப் போன தலைவர்கள், தமிழ்த் தேசியத்துக்காக பாடுபட்ட தலைவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு குடைக்குக் கீழ் வந்து ஒரு பயணம் நடத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கசப்புணர்வுகளைக் களைந்து அதனை பதிவு செய்து முன்னகர்தல் இப்போதைய தேவை.” என்றார். (150)

இலங்கையை ஐசிசியில் பாரப்படுத்த கோரி பாண்டிருப்பிலும் உண்ணாவிரதம்!

தென்னை உற்பத்தி பயன்களை அதிகரிக்க இளைஞர்களே முன்வாருங்கள் – அருந்திக