செய்திகள் பிரதான செய்தி மலையகம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை

லுனுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுலேகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வயதான பெண் ஒருவர் (74-வயது) கொலை செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பெண்ணின் மகள் (43 வயது) காயங்களுக்கு உள்ளதாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் லுணுகல, கிவுலேகம பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்சம்பவம் தொடர்பில் 53 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நேற்று (18) மாலை குறித்த பெண் தனது மகளுடன் வயலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதிக்கு வந்த சந்தேக நபர் மகளை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது மகளை காப்பற்ற முற்பட்ட தாயின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து குறித்த தாய் உயிரிழந்துள்ளார். மகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகாத உறவு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related posts

‘காணாமல்போன 20 ஆயிரம் பேர் மரணம்’ – இப்படி ஜனாதிபதி கூறவில்லையாம்!

G. Pragas

டக்ளஸ்க்கு சாணி அடி!

Bavan

தடைகள் தாண்டியும் மாவீரர் தினம் இடம்பெறும் -பீற்றர் இளஞ்செழியன் தெரிவிப்பு

reka sivalingam

Leave a Comment