in

‘கூகுள் குட்டப்பன்’ படத்தில் ஜோடி சேரும் லோஸ்லியா, தர்ஷன்!

கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் “அன்ரொய்டு குஞ்சப்பன்”.

இத்திரைப்படத்தின் தமிழ் உரிமத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வாங்கியுள்ளார். இப்படத்துக்கு ” கூகுள் குட்டப்பன்” என பெயரிடப்பட்டுள்ளது.

கே.எஸ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக தர்ஷனும், கதாநாயகியாக லோஸ்லியாவும் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை சபரி மற்றும் சரவணன் இயக்குகின்றனர்.

பிக்போஸ் தமிழின் 3ஆவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான தர்ஷனையும், லோஸ்லியாவையும் வைத்து படம் பண்ணுவேன் என கே.எஸ்.ரவிக்குமார் அப்போதே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொற்றுக்குள்ளான வைத்தியர் தீவிர சிகிச்சையில்!

தைப்பூச ஸ்பெஷல்; கந்தசஷ்டி கவசம் உருவான வரலாற்றுக் கதை!