செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

கைக்குண்டுடன் சின்னவன் கைது! – மேலும் ஐவர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த நபர், கைக்குண்டுடன் நேற்று (16) இரவு, கோப்பாய் பகுதியில் வைத்து, யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் அண்மைய நாட்களாக இடம்பெற்று வருகின்ற திருட்டு சம்பவங்கள் தொடர்பில் சின்னவன் எனப்படும் சந்தேக நபர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலைய பிரிவில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி, கொள்ளை மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 35 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள நிலையிலேயே இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.

வவுனியாவில் சங்கிலி அறுப்பு குற்றத்துக்கு 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் சந்தேக நபரின் மனைவி தென்மராட்சியைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது மனைவியை கொண்டு சென்றவரைக் கொலை செய்யும் நோக்குடன் சந்தேக நபர், உரும்பிராய் ஊடாக சாவகச்சேரிக்கு மற்றொருவருடன் பயணித்த போது, யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேக நபரின் இடுப்புப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டது.

அத்துடன், கொள்ளையிடப்பட்ட 16 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், அவற்றை கொள்வனவு செய்த, உடமையில் வைத்திருந்த, விற்பனை செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஆயுதப் போராட்டத்தை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது – அரியம்

G. Pragas

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani

இலங்கையை சாதகமாக பார்க்குமாறு ஜனாதிபதி ஜரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவிப்பு

Tharani