கிழக்கு மாகாணம் செய்திகள்

கைக்குண்டு மீட்புத் தொடர்பில் இளைஞன் கைது – 14 நாட்கள் மறியல்

அம்பாறை – கல்முனை, நற்பிட்டிமுனையில் நேற்று (28) கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் கைதான இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீதியோரத்தில் பயணம் செய்த ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்குறி்ப்பிட்ட இடத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனடிப்படையில் நற்பிட்டிமுனை ஜும்மா பள்ளி வீதியை சேர்ந்த அப்துல் ரசீம் அஜ்மல் (வயது-24) என்பவர் கைதானார்.

கைதானவரை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சி.சி.டி.வி.காணோளி தகவல் ஒன்றின் அடிப்படையில் மற்றுமொருபரை தேடி வருகின்றனர்.

இதேவேளை மீட்கப்பட்ட குண்டினை, மாலை 5 மணியளவில் விசேட அதிரடிப்படையின் விசேட அணி வருகை தந்து செயலிழப்பு செய்தனர். அக்குண்டு பெரும் சத்தத்துடன் வெடித்ததுடன் அப்பகுதி அதிர்ந்ததை அவதானிக்க முடிந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, நற்பிட்டிமுனை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நிலையில் சிலர் நடமாடுவதாக விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

எனினும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் குறித்த பகுதியில் கைக்குண்டொன்று வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக தேடுதலுக்காக குறித்த பகுதிக்கு வந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கருகே உள்ள பற்றைக்குள் இருந்து பணப்பை ஒன்றை மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட பணப்பையை அடிப்படையாக வைத்து, அதே பகுதியை சேர்ந்த 23 வயதினை உடைய இளைஞனை சந்தேகத்தின் பேரில் கல்முனை பொலிஸார் கைது செய்தனர்

மேலும் கைதான இளைஞனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவரது வீடு அம்பாறையில் இருந்து வரவழைக்கப்பட்ட விசேட தடயவியல் பொலிஸாரினால் மோப்ப நாயின் உதவியுடன் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐதேக உட்பூசல்: ரணில் – சஜித் நேரடி சந்திப்பு!

Tharani

முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு காப்புறுதி திட்டம்

Tharani

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி பாதிப்பை தடுக்க நடவடிக்கை

Tharani