செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

கைதடியில் மோட்டார் சைக்கிள் மோதி சிப்பாய் படுகாயம்!

கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இராணுவ சிப்பாய் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (19) மதியம் குறித்த சோதனைச் சாவடியில் அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் மறித்துள்ளார்.

இதன்போது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இராணுவச் சிப்பாய் மீது மோதியுள்ளது. இதனால் இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்துள்ளது. படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மோதி இளைஞன் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நான்கு கட்டங்களாக பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகும்!

G. Pragas

முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன!

reka sivalingam

உள்நாட்டு விவசாயத்துறையை மேம்படுத்த திட்டம்!

Tharani